அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அதில், தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சிலர் பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாஸ்ட்அப் மூலம் பணம் கேட்டு யாரேனும் வசூலித்தால் தயவு செய்து யாரும் அது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி.