தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
டிரிப்பர் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்திருக்கும் படம் பரோல். துவாரக் ராஜா இயக்கி உள்ளார். ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் படம் பற்றி இயக்குனர் துவாரக் ராஜா கூறியதாவது: இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்னையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர்.
தாய் இறந்த காரணத்தால், தனக்குப் பிடிக்காத அண்ணனை சிறையில் இருந்து பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும், அவன் அண்ணனுக்கும் இடையிலுள்ள பிரச்னைகளும், அதைச்சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களும்தான் படம். படத்தின் கதை களம் வடசென்னை. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி தணிக்கை குழுவில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் வருகிற 11ம் தேதி வெளிவருகிறது. என்றார்.