ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நேற்று ஜப்பானில் வெளியாகி உள்ளது. இதற்காக இயக்குனர் ராஜமவுலி மற்றும் படத்தில் நாயகர்களாக நடித்த ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் ஜப்பானுக்கு சென்று அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஜப்பானிய வீடியோகேம் இயக்குனரான கொஜிமோ ஹிடியோ என்பவரை சந்தித்த ராஜமவுலி அவருடைய ஸ்டுடியோவுக்கும் விசிட் அடித்துள்ளார்.
அப்போது அந்த ஸ்டுடியோவில் ராஜமவுலியை அமரவைத்து விதவிதமான கேமரா உபகரணங்களால் ராஜமவுலியை ஸ்கேன் செய்து படம்பிடித்துள்ளார் கொஜிமோ ஹிடியோ. இது வீடியோ கேமில் நடிப்பதற்காக ஒருவருடைய உருவத்தை 3டியில் மாற்றும் பணி என்பதால் ஒருவேளை ராஜமவுலியின் உருவத்தை தனது புதிய வீடியோ கேம் ஒன்றில் அவர் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த சந்திப்பு குறித்து ராஜமவுலி, கொஜிமோ ஹிடியோ இருவருமே சில புகைப்படங்களை சோசியல் மீடியாவை பகிர்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொஜிமோ ஹிடியோ ராஜமௌலி பற்றியும் அவரது ஆர்ஆர்ஆர் திரைப்படம் பற்றியும் புகழ்ந்து கூறி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.