தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
கடந்த ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்போது முதலே வாடகைத்தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில் தான் கர்ப்பமாக இருந்த சமயம் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து அதுபற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சின்மயி.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இந்த கமெண்ட்டை பார்த்து செம கடுப்பாகி விட்டார் சின்மயி.
அந்த நபரின் சமூகவலைதள கணக்கை பகிர்ந்து, ‛‛ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் எனது கர்ப்பக்கால போட்டோவை நான் வெளியிடவில்லை. அது தான் உண்மையான காரணம். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. அவர்களது வளர்ப்பு அப்படி'' என கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.