மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: திடீரென காணாமல் போன பேபி உமா | தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் |

இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‛‛திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்'' என்றார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக கூறுகையில், ‛‛ராஜராஜ சோழன் இந்து இல்லையென்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்ல இஸ்லாமியரா. உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மதங்களும். இதையே இந்து என்றார்கள். உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை'' என்றார்.




