விஜய்காந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் : பிரேமலதா | சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் |
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருது வழங்கும் விழா நடக்காமலேயே இருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் இதற்கான விழா நடந்தது. விருதுக்கு தேர்வான கலைஞர்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
விக்ரம், அஞ்சலி, ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், ஹெச்.வினோத், ஐஸ்வர்யா ராஜேஷ், கரண், சித்தார்த், சரத்பாபு, மஹதி, விக்ரம் பிரபு, வசந்தபாலன், பிரபு சாலமன், ராம், நாசர், இமான், ஸ்வேதா மோகன், தம்பி ராமையா, சமுத்திரகனி, மாஸ்டர் கிஷோர், ஸ்ரீராம், ‛ஆடுகளம்' நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, களவாணி எஸ்.திருமுருகன், பொன்வண்ணன், சற்குணம், பாடகர் கார்த்திக், தேவதர்ஷினி, ராதா மோகன், ஆர்த்தி கணேஷ், லிங்குசாமி, எஸ்.ஆர்.பிரபாகரன், சுகுமார், விடியல் ராஜ், ஜெயபிரகாஷ், எஸ்.பி.பி.சரண், லியோ ஜான்பால், இனியா, அனல் அரசு, சூப்பர் சுப்பராயன், ஷோபி, ஜி.ஆர்.கே.கிரண், செல்வி சாதனா, ஜே.சதீஷ் குமார், ஹரிச்சரண், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், சந்தானம்(கலை இயக்குனர்), காயத்ரி ரகுராம், மாஸ்டர்ஸ் ரமேஷ், விக்னேஷ்(காக்க முட்டை) நீரவ்ஷா, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இதேப்போல் சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீகுமார், சங்கீதா, சிவன் ஸ்ரீனிவாசன், வடிவுக்கரசி, ஸ்ரவன், கவுதமி(டிவி), விக்ரமாதித்தன், திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நேரில் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
விருதுகளை வழங்கி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனாவால் திரைப்பட துறை முடங்கியது. அப்போது, திரைப்படத் துறைக்கான விருதுகளை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.' அதன்படி ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் தற்போது வழங்கப்படுகின்றன. இனி, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்'' என்றார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் நாசர், பொன்வண்ணன், பாடகர் ஹரிச்சரண் உள்ளிட்டோர் பெற்றனர். களவாணி, மைனா, கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டன.அவரின் சார்பில், அவரின் மகனும், மகளும் பெற்றனர்.அப்போது, அனைவரும் கைத்தட்டி உற்சாகம் அடைந்தனர்.