கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

கொம்பன் படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி உள்ள மற்றுமொரு படம் ‛கொம்பன்'. ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். சூரி, கருணாஸ், ஆர்.கே.சுரேஷ், இளவரசு, வடிவுக்கரசி, சிங்கம் புலி, மைனா நந்தினி உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் அடுத்தவாரம் ஆக., 12ல் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது.
விழாவில் பங்கேற்ற கார்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : மதுரை என்றாலே ஸ்பெசல் தான். விருமன் 12ம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. கடைக்குட்டி சிங்கத்திற்கு பின் கிராமம் சார்ந்த படம் , கிராமத்தில் உள்ள வீரம், பாசம், கேளிக்கை என்பதே வேறுவகையில் இருக்கும். இது போன்ற கிராமம் சார்ந்து இங்கு வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே இயக்குனரிடம் இரு முறை நடித்துள்ளேன். இந்த நிகழ்ச்சி திருவிழா போல உள்ளது. மதுரை சார்ந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வைத்தது தான் சிறப்பு. சினிமாத்துறை சார்ந்த இடங்களில் நடைபெறும் ஐடி ரெய்டு இயல்பான ஒன்றுதான். மூன்றாண்டுக்கு ஒரு முறை நடப்பது தான். அதில் பின்புலம் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் சினிமாத் துறையினர் மீதான ரெய்டுகள் மட்டும் பெரிதாக செய்தி ஆகி விடுகிறது.
இவ்வாறு கார்த்தி கூறினார்.