வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' |
ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து, படையப்பா என்ற இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதையடுத்து அவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த ராணா படம் தொடங்கப்பட்டபோது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் அவர்கள் லிங்கா படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் முதல் இரண்டு படங்களை போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் அதிர்ச்சி தோல்வி கொடுத்தது. அதையடுத்து அவர்கள் இணையவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லிங்கா படம் தோல்வி அடைவதற்கு ரஜினி, தயாரிப்பு நிறுவனம் எடுத்த சில முடிவுகளும் காரணம் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அது குறித்து அவர் கூறுகையில், லிங்கா படத்திற்கு முதலில் கிளைமேக்ஸை வேறு விதமாகதான் வைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை பார்த்த ரஜினி அதில் மாற்றம் செய்ய சொன்னார். முதலில் இந்த படத்தில் பலூன் காட்சிகள் எல்லாம் இடம் பெறவில்லை. ரஜினி சொன்னதால் அந்த காட்சிகளை படமாக்கினோம். அதுமட்டுமின்றி படத்தை திட்டமிட்டபடி முடித்து தர வேண்டும் என்று தயாரிப்பு துறை இன்னொரு பக்கம் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்திருந்த கிளைமேக்ஸை படமாக்காமல் படத்தை முடித்தோம் என்று கூறியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார்.