போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சத்யஜித் ரே, மிருனாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன் வரிசையில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தருண் மஜூம்தார். 92 வயதான இவர் முதுமை காரணமாக பல நோய்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகம் மற்றும் இருதய நோய் காரணமாக அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தருண் மஜூம்தார் 40 படங்கள் வரை இயக்கி உள்ளார். பலிகா பது, குஹேலி, ஸ்ரீமர் பிருத்விராஜ், தாதர் கீர்த்தி' ஆகிய குறிப்பிடத்தக்கவை. கஞ்சர் சுவர்கோ, நிமந்த்ரன், கனடேவதா, ஆரன்யா அமர், அலோ ஆகிய படங்களுக்காக பல்வேறு பிரிவின் கீழ் தேசிய விருது பெற்றுள்ளார். 7 முறை சிறந்த இயக்குனருக்கான வங்காள அரசின் விருதை பெற்றுள்ளார்.