'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது ரஜினியின் 169வது படமான ஜெயிலர் படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற படம் ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது குட்லக் ஜெர்ரி படம் குறித்த இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, இந்த குட்லக் ஜெர்ரி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இப்படம் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பதால் ஹிந்தியில் ரீமேக் செய்ய முதலில் நெல்சனைத்தான் அணுகி இருக்கிறார்கள். ஆனால் அந்த நேரம் பார்த்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதனால் நெல்சனுக்கு பதிலாக குட்லக் ஜெர்ரி படத்தை சித்தார்த்சென் என்பவர் இயக்கியுள்ளார்.