ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத், ஜோனிதா காந்தி பாடிய 'அரபிக் குத்து' பாடல் வெளியானதுமே சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்துவிட்டது.
மிக விரைவாக 100 மில்லியன் சாதனைகளைப் பெற்ற இந்தப் பாடல் தற்போது யு டியூபில் 400 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதுவரையில் தமிழ் சினிமா பாடல்களில் 1300 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஒரே பாடலாக 'ரௌடி பேபி' பாடல் மட்டுமே இருக்கிறது. 1000 மில்லியன் பார்வைகளை வேறு எந்த தமிழ் சினிமா பாடலும் கடக்கவில்லை.
அதே சமயம், 300 மில்லியன் பார்வைகளை “வாத்தி கம்மிங் (மாஸ்டர்) , ஒய் திஸ் கொலவெறி (3)' ஆகிய பாடல்கள் கடந்துள்ளன. 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக, “வாயாடி பெத்த புள்ள (கனா), காந்தக் கண்ணழகி (நம்ம வீட்டுப் பிள்ளை), மரண மாஸ் (பேட்ட), குலேபா (குலேபகாவலி), மாங்கல்யம் (ஈஸ்வரன்)” ஆகிய பாடல்கள் உள்ளன.
400 மில்லியனைக் கடந்துள்ள 'பீஸ்ட்' பாடல் யு டியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ள இரண்டாவது பாடலாக உள்ளது.