2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் பண்ணைபுரத்து ‛இசை ராஜா' இளையராஜா. சினிமாவில் படங்களுக்கு இப்போதும் பிஸியாக இசையமைத்து வரும் இவர் தொடர்ந்து பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடந்த பிரம்மாண்ட எக்ஸ்போவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து சென்னையிலும் ரசிகர்களை இசை மழையில் நனையவிட்டார்.
அடுத்தப்படியாக கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி, இளையராஜா தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் மாலை 6.30 மணியளவில் ‛ராஜா' இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.
அப்புறம் என்ன கோவை மக்களே இளையராஜாவின் இன்னிசை மழையில் நனைய தயாரா....! நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை உடனே புக் செய்ய அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://insider.in/raaja-live-in-concert-coimbatore-2-june-2022/event