பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

நீண்டநாட்களாக காதலர்களாக வலம் வருகின்றனர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இருப்பினும் தற்போது இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்தவாரம் வெளியானது. அந்த சமயத்தில் திருப்பதி சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஷீரடிக்கு சென்றும் வழிபட்டனர்.
இந்நிலையில் ஒருவாரத்திற்குள் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று(மே 7) விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி திருப்பதியில் வழிபாடு நடத்தி உள்ளனர். இதை வைத்து இவர்கள் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினி உலகில் தகவல் பரவி வருகிறது. அதாவது ஜூன் 9ல் இவர்களுக்கு திருமணம் என்றும், அதற்கான பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவின் மக்கள் தொடர்பாளரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸாவதற்கு முன்பும், பின்பும் இருவரும் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மற்றபடி திருமணம் பற்றிய எந்த தகவலும் உறுதியாகவில்லை'' என்றார்.
அதேசமயம் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய போவதாக திரையுலகினர் பேசி வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறந்தால் மட்டுமே திருமணம் எப்போது என்பது தெரிய வரும்.