எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மும்பை: கன்னட நடிகர் சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தி மொழி குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்துக் கொண்ட நிலையில், பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா, கன்னட டப்பிங் படமான கே.ஜி.எப்., 2 தொடக்க நாளில் ரூ.50 கோடி வசூல் செய்ததால் பாலிவுட் நடிகர்கள் 'இன்செக்யூர்' ஆக உள்ளனர் என மேலும் பற்ற வைத்துள்ளார்.
தமிழில் நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். இவர் தனது புது பட விளம்பர நிகழ்ச்சியில் சம்பந்தமில்லாமல் ஹிந்தி தேசிய மொழி கிடையாது என பேசியது சர்ச்சையானது. சுதீப் கருத்தை மறுத்து ஹிந்தி தான் தேசிய மொழி என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிலடி தந்தார். உடனே சுதீப் தான் வேறொரு அர்த்தத்தில் அவற்றை கூறினேன், நமது நாட்டின் அனைத்து மொழிகளை மதிக்கிறேன், விரும்புகிறேன். இத்துடன் இந்த விஷயத்தை விட நினைக்கிறேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அஜய் தேவ்கனும் தன்னை பொறுத்தவரை சினிமாத் துறை ஒன்று தான் என கூறினார்.
இந்நிலையில் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா மீண்டும் இவ்விஷயத்தை கிளறியுள்ளார். தனது சமூக வலைதள பதிவில், “சுதீப் சொல்வது மறுக்க முடியாத அடிப்படை உண்மை. கே.ஜி.எப்., 2 கன்னட டப்பிங் திரைப்படம் தொடக்க நாளில் ரூ.50 கோடி வசூலித்ததால் வடநாட்டு நட்சத்திரங்கள் தென்னக நட்சத்திரங்களை கண்டு பாதுகாப்பற்றவர்களாகவும், பொறாமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வரும் ஹிந்தி படங்களின் துவக்க வசூலை நாம் பார்க்கத் தானே போகிறோம்.” என கூறினார்.