பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை காட்டியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரு மகள்களும், ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஜூன் 27ல் ரோஹித் தாமோதரன் என்பவர் உடன் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஷங்கர் தனது மனைவி உடன், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்தார். அப்போது தனது மகளின் திருமண வரவேற்புக்கு வரும் படி அழைப்பு விடுத்து, சினிமாவில் தன்னை அறிமுகம் செய்தவர் என்பதால் அவரிடம் ஆசியும் பெற்றார். இதையடுத்து ஷங்கரின் இளைய மகளும், தற்போது கார்த்தி உடன் விருமன் படத்தில் நடித்து இருப்பவருமான அதிதிக்கு தான் திருமணம் நடக்க போகிறது. அதற்கான அழைப்பிதழை தான் ஷங்கர் வழங்கினார் என செய்திகள் பரவின.
![]() |