லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ள படம் பீஸ்ட். ஏப்ரல் 14ஆம் தேதியன்று பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான கேஜிஎப் 2 படமும் வெளியாக உள்ளது
இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்துடன், கேஜிஎப் 2 படம் போட்டி போடுவது குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக கடும் விவாதம் நடைபெற்று வந்தது. நேற்று கேஜிஎப் 2 டிரைலர் வெளியீட்டின்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷ் பேசுகையில், ‛‛பீஸ்ட் படமும் கேஜிஎப் 2 படமும் போட்டி போடவில்லை. இது தேர்தல் கிடையாது இரண்டுமே சினிமாதான் இரண்டையுமே மக்கள் ரசிப்பார்கள்'' என கூறியிருந்தார். மேலும் விஜய்யைப் பற்றி பெருமையாக பேசி இருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் கேஜிஎப் 2, பீஸ்ட் படங்களுக்கு இடையிலான போட்டி குறித்த சர்ச்சை சற்று அடங்கி போனது.
இந்நிலையில் கேஜிஎப் 2 டிரைலர் குறித்து படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமாகவும், தீயாகவும் கேஜிஎப் 2 டிரைலர் உள்ளது என அவர் பாராட்டியுள்ளார்.