ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

'பான்-இந்தியா' என்ற பரபரப்பு 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பிரபலமானது. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த பிரபாஸ் அதன் மூலம் பான்--இந்தியா ஹீரோவானார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' ஹிந்தியில் மட்டுமே ஓடியது. சமீபத்தில் வெளிவந்த 'ராதேஷ்யாம்' நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும் அடுத்தடுத்து நான்கைந்து பான்--இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
தெலுங்கில் தயாராகி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்த 'புஷ்பா' படமும் பான்--இந்தியா படமாக வெளியாகியது. எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் ஹிந்தியிலும் மற்ற மொழிகளிலும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் மூலம் நாயகனாக நடித்த அல்லு அர்ஜுன் பான்--இந்தியா ஹீரோவானார்.
இப்போது அந்த வரிசையில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டது. அப்படத்தில் நடித்த ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இப்போது பான்--ஹீரோக்கள் ஆகிவிட்டனர்.
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோரைத் தொடர்ந்து அடுத்த பான்--இந்தியா ஹீரோ வரிசையில் காத்திருப்பவர் விஜய் தேவரகொன்டா. அவர் நடித்து வரும் 'லிகர்' படம் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது. அதற்குள் தெலுங்கில் வேறு யாராவது பான்--இந்தியா ஹீரோவாக மாறுவார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ள 'பீஸ்ட்' படம் பான்--இந்தியா படமாக வெளிவருவதால் விஜய், பான்--இந்தியா ஹீரேவாக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏப்ரல் 14ல் வெளியாக உள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' மூலம் தன்னுடைய பான்--இந்தியா அந்தஸ்தை யாஷ் இன்னும் உயர்த்திக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.