பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது. பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், ராதே ஷ்யாம் மூலம் அதை பிரபாஸ் அதை ஈடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியுள்ளது. இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் டைரக்ஷனில் நடித்து வரும் சலார் படத்தை பிரபாஸ் ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் சலார் படத்தின் படப்பிடிப்பின்போது பிரபாஸுக்கு சில காயங்கள் ஏற்பட்டன. தற்போது இதற்காக ஒரு மைனர் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால் ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்புகிறார் பிரபாஸ். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மைனர் சர்ஜரி முடிந்து அவர் விரைவில் குணமாகி திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.