'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடித்தவருமான நடிகர் விஷ்ணு மஞ்சு வீட்டில் விலை உயர்ந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் சாதன பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று திருடு போனது. இதுகுறித்து ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஷ்ணு மஞ்சு.
அதேசமயம் இந்தப்பொருள் திருடு போனது தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து தான் என்று ஒரு தகவலும் கிளம்பியது. ஆனால் இதை மறுத்துள்ள போலீசார் திருட்டு நிகழ்ந்தது நடிகர் விஷ்ணு மஞ்சுவின் வீட்டில் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் இந்த திருட்டு நடந்த பின்னர் ஹேர் டிரஸர் நாக ஸ்ரீனு என்பவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.