முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் போன்ற சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். இந்தி பிக் பாஸ் சீசன் 15ல் கலந்து கொண்டார்.
ராக்கி சாவந்த் கடந்த 2019ம் ஆண்டு தொழில் அதிபர் ரித்தேஷ் சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவரை பிரிந்து விட்டதாக நேற்று காதலர் தினத்தன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது கூறியிருப்பதாவது: அன்புள்ள நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் சொல்ல விரும்புவது, நானும் ரித்தேஷும் மனமொத்து பிரிய முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்தன. அதில் பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. நாங்கள் வேறுபாடுகளை மாற்ற முயற்சித்தோம். ஆனால் இருவரும் இணக்கமாக பிரிந்து செல்வது தான் சிறந்தது என்று முடிவு செய்தோம். இப்போது இருவரும் எங்கள் வாழ்க்கையை தனித்தனியாக அனுபவிக்கிறோம்.
இது காதலர் தினத்திற்கு முன்பே நடக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு தினத்தில் முடிவெடுத்ததில் நான் வருத்தமடைகிறேன். ரித்தேஷ் அவரது வாழ்க்கையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். ஆனால் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், நான், எனது வேலையில் கவனம் செலுத்த வேண்டும். என்னை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். எப்போதும் என்னைப் புரிந்துகொண்டு ஆதரவளித்ததற்கு நன்றி.
இவ்வாறு எழுதியிருக்கிறார்.