ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் 'பான்--இந்தியா' என்ற வார்த்தை கடந்த சில வருடங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தெலுங்கில் வெளியான 'பாகுபலி' படங்களுக்குப் பிறகுதான் இது அதிகமானது.
'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ் அதன்பின் பான்--இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தார். சமீபத்தில் 'புஷ்பா' படத்தின் வெற்றி மூலம் அல்லு அர்ஜுனும் பான்--இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துள்ளார். அவர்களைப் போல இன்னும் பல தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு பான்--இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. வரும் காலங்களில் ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் தங்களது படங்களை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, 'பான்--வேர்ல்டு' என்ற புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் 'அரபிக் குத்து' வரும் பிப்ரவரி 14ம் தேதியன்று வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பு வீடியோ ஒன்றில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் விஜய்யும் போன் வழியாக இணைந்து பேசினார். அந்த வீடியோவில் கடைசியாக “இந்தப் பாடல் 'பான்--வேர்ல்டு' பாட்டு சார்” என சிவகார்த்திகேயன் கமெண்ட் அடித்துள்ளார்.
ஆனால், இந்த அரபிக் குத்து வகைப் பாடல் 1996ம் வருடம் சுந்தர் சி இயக்கத்தில் சிற்பி இசையமைப்பில் 'அழகிய லைலா…' பாடலிலேயே வந்துவிட்டது என கமெண்ட் அடிக்கிறார்கள் சில ரசிகர்கள்.




