''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமந்தா அறிமுகமான பாணா காத்தாடி, செமபோத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ள படம் பிளான் பண்ணி பண்ணணும். ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், விஜி சந்திரசேகர், ரேகா, சந்தான பாரதி, சித்தார்த் விபின், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் கொரோனா காலத்துக்கு முன்பே முடிந்து விட்டது. பல முறை இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, தயாரிப்பு தரப்பால் ரிலீசுக்கு பிளான் பண்ணப்பட்டாலும் படம் வெளியாகவில்லை. தற்போது சரியாக பிளான் பண்ணப்பட்டு இன்று (டிச 30) படம் வெளியானது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது: ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படத்தை தரும் நோக்கில், இந்தப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தாலும், அதை வடிவமைக்கும் முழு செயல்முறையும், மிகவும் உணர்ச்சிகரமான பயணமாக மாறிவிட்டது,
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவின் சவால்களை தாண்டி, இந்த திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்த ஒரே படம் இது என்று நான் நினைக்கிறேன்.
பல தடங்கல்கள் வந்தபோது, திரையுலக நண்பர்கள் தங்களின் முழு ஆதரவை வழங்கியதை காண மகிழ்ச்சியாக இருந்தது. சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு விளக்கைப் போல எங்களுக்கு ஆதரவளித்த, சுமூகமான திரையரங்கு வெளியீட்டை உறுதிசெய்ய, தொழில்துறையைச் சேர்ந்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார்.