கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் |

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன். இவர் தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ படங்களில் நடித்துள்ளார். நிலா, அமெரிக்க மாப்பிள்ளை உள்பட சில வெப் சீரிசிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் விஸ்மையா என்ற படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ம் ஆண்டு மீ டூ புகார் கூறினார். இதுகுறித்து பெங்களூரு போலீசிலும் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் ஆனபிறகும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அர்ஜூனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறி வந்தனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள், அர்ஜூனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிமன்றம் போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.