ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

வெள்ளித்திரையில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் வந்த அருண் பிரசாத் அதை சின்னத்திரையில் சாதித்து காட்டிவிட்டார்.
நடிகர் அருண் பிரசாத் சேலத்தில் பிறந்து வளர்ந்து ஹீரோவாகும் ஆசையில் சென்னைக்கு வந்து விஸ்காமில் சேர்ந்து படித்தார். படிக்கும் போதே பல குறும்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 'மேயாத மான்' படத்தில் வைபவின் நண்பனாக நடித்ததன் மூலம் அருண் பிரசாத்தின் வெள்ளித்திரை கனவு ஓரளவு பலித்தது. தொடர்ந்து 'ஜடா' படத்தில் கதிரின் நண்பனாக நடித்தார். அதன் பின் சரிவர வாய்ப்புகள் வராத நிலையில் தான் விஜய் டிவி அவரை சீரியலுக்கு அழைத்தது. முதலில் தயங்கிய அருண் பிரசாத் ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.
ஹீரோவாக இருக்கும் பாரதி நெகடிவ் ஷேடிலும், செண்டிமெண்ட் சீன்களிலும் கலக்கி வருகிறார். முதல் சீரியலிலேயே கைதேர்ந்த நடிகராக அசத்தி வரும் அருண் பிரசாத்துக்கு இன்று ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரண்டு படங்களில் நடித்தும் பலரால் அறியப்படாத அருண் பிரசாத், இன்று ஒரே சீரியலில் பலருக்கும் ஃபேவரைட்டான பாரதியாக பிரபலமாகியுள்ளார். முயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே கை கொடுக்கும் என்று நம்பும் அருண் வெள்ளித்திரை ஹீரோ கனவையும் விடாமல் துரத்தி வருகிறார். அவரது விடாமுயற்சி வெற்றி பெற்று அவரது கனவு பலிக்கட்டும்.