லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஓடிடியில் இந்த ஆண்டு தன்னுடைய அடுத்தடுத்த இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சிறியவர்களையும் அதிகம் கவர்ந்தது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஜுலை மாதம் வெளியாகி அதுவும் நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றது.
கடந்த வாரம் ஆர்யா நடித்து தியேட்டர்களில் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. இந்த வருடம் ஆர்யா நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே அவருடைய மார்க்கெட் உயரக் காரணமாக அமைந்துவிட்டது.
தன்னுடைய அடுத்த படமாக 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தை ஆர்யா ஆரம்பித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இயக்குனர் சக்தி சவுந்திரராசன் கூறுகையில், ‛‛இப்படம் எல்லா ரசிகர்களையும், ஈர்க்கும்படி இருக்கும். தமிழுக்கு முற்றிலும் புதுமையான கதையாக இப்படம் இருக்கும். திரையுலகின் அரிதான முத்து ஆர்யா. இப்படம் ஆர்யாவுக்கு சிறப்பான படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்திராத பாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.