ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் படம் 3.33 பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படம். காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் குறும்பட நடிகை ஸ்ருதி செல்வம். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் 'நீயெல்லாம் ஏன் நடிக்கிற' என்று தான் கேட்டார்கள். கிண்டல் செய்தார்கள். நிறைய அவமானங்களை சந்தித்தேன். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். என்றார்.