விமர்சனம்
அ நிறம் | அளவு
அம்மா இல்லாத மகளை, அன்பாக ஊட்டியில் வளர்க்கிறார் விஜய் ஆண்டனி. மகளின் டீச்சர் ப்ரித்தி அஸ்ராணி அந்த சிறுமிக்கு தாய் ஆக விரும்புகிறார். திடீரென சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு. ரத்த செல்களில் புதுவித நோய். அந்த குழந்தையின் சகோதரன், சகோதரி ஸ்டெம் செல்லை வைத்து டிரீட்மெண்ட் செய்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு என டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போது, நான் குழந்தைக்கு தந்தை இல்லை என்ற உண்மையை சொல்கிறார் விஜய் ஆண்டனி. அந்த குழந்தையின் நிஜ அம்மா, அப்பாவை விஜய் ஆண்டனி தேடி செல்கிறார். அவர்கள் கிடைத்தார்களா? அங்கே என்ன பிரச்னை? சிறுமி உயிர் பிழைத்தாரா? என்பது அப்பாகுட்டி கதை.
அப்பா பாசம் பின்னணியில் ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளது. இந்த மாதிரி புது நோய் பற்றி பல கதைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி அப்பாபாசம், இந்த மாதிரி நோய் பாதிப்பு, ட்ரீட்மெண்ட் பற்றி எந்த படமும் வந்தது இல்லை. அந்த வகையில் புது களத்தில் படம் கொடுத்து இருக்கிறார் மு.மாறன்.
ரவுடிகளுடன் சண்டை போட்டு விட்டு ஒரு கைக்குழந்தையுடன் விஜய் ஆண்டனி ஊட்டி வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. சிறுமி லிதன்யா ஸ்கூல் டேஸ், அப்பா பாச, மகள் பாச சீன்கள், ஹீரோயின் காதல் என கதை மெதுவாக நகர்கிறது. என்ன கதை இது, புரியலையே என யோசிக்க, குழந்தை மயங்கி விழ, ஆஸ்பிட்டல், டாக்டர், டெஸ்ட், புதுவித நோய் என கதை வேகமெடுக்கிறது.
குழந்தையின் நிஜ அம்மாவை, அப்பாவை தேடி ஹீரோ செல்வதும், அப்போது சந்திக்கும் புதுவித பிரச்னைகளும் கதையின் உயிர். அதில் கொஞ்சம் புதுமை. கொஞ்சம் நாடகத்தனம்.
மற்ற படங்களை போல இதிலும் அவர் பாணியில் அமைதியாக நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி, ஆக்ரோசமாக சண்டை பண்ணுகிறார். குறிப்பாக குழந்தை உயிரை காப்பாற்ற போராடும், கெஞ்சும், அடி வாங்கும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். நிஜ அப்பாவாக இல்லாவிட்டாலும் அப்பா பாசத்தை எப்படி காண்பிக்கிறார். எந்த அளவுக்கு அவமானப்படுகிறார் என்பது கதையின் முக்கியமான விஷயம். அதை உணர்ந்து நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. என்ன முந்தைய படங்களின் நடிப்பில் சாயல் இதிலும் இருக்கிறது. அவர் தயாரிக்கும் படம் என்பதால் அவருக்கு பில்டப் அதிகம். அவரை ரொம்ப நல்லவர், வல்லவராக படம் முழுக்க காண்பிக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ராணி வருகிறார். மேக் அப் அதிகம் இல்லாமல் நடிப்பில் அழகை, பாசத்தை காண்பித்து இருக்கிறார். குழந்தையின் நிஜ அம்மாவாக வரும் ஹரிப்ரியா, அப்பாவாக வரும் அருவி மதன், இன்னொரு முக்கியமான கேரக்டரில் வரும் பகவதி பெருமாள் நடிப்பு, கேரக்டர், இவர்கள் செய்யும் சில விஷயங்கள் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்த உதவி இருக்கிறது. இவர்களுக்கு இடையேயான சண்டைகள், ஈகோ பிரச்னைகளும் படத்துக்கு பிளஸ்.
கதையின் முக்கியமான கேரக்டர் குழந்தை நட்சத்திரம் லிதன்யாதான். அந்த குழந்தையின் வெகுளிதனம், பாசம், மீன் வளர்ப்பு காட்சி ஆகியவை டச்சிங். கிளைகிளைமாக்சில் கோர்ட் காட்சியில் அவர் அப்பாகுட்டி என அழைக்கும்போதும், அடுத்த வரும் காட்சிகளும் அனைவரையும் கண் கலங்க வைப்பது நிச்சயம். விஜய் ஆண்டனி இசையில் அடிக்கடி வரும் நீதான் கண்ணாடி அப்பா பாசப்பாடல் மனதை தொடுகிறது. ராஜேந்திரன் ஒளிப்பதிவு ஊட்டி யை அழகாக காண்பிக்கிறது
அப்பா பாசத்தை குழந்தைக்கு நோய், ஆபரேசன், தவிப்பு என பல படங்களில் சொல்லி இருந்தாலும் இதில் சொல்லும் நோய், ஹீரோ எடுக்கும் முயற்சிகள், அதற்கு வரும் தடைகள் படத்தை பிரஷ் ஆக்குகிறது. ஆனாலும் அந்த நோய் விஷயம், ஹீரோ கெஞ்சும் முயற்சிகள் சிலசமயம் போரடிக்கிறது. அதை இன்னும் விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம். கிளைமாக்ஸ் மனதை டச் பண்ணுகிறது. இந்த படம் புனேவில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என இயக்குனர் திரையில் காண்பிக்கும்போது இன்னும் சிலிர்ப்பு. அந்த நோய் பின்னணி, தீர்வு மனதை பிசைகிறது. ஆனாலும் இரண்டாம் பாதியில் கவனம் செலுத்திய இயக்குனர் முதற்பாதியில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு இந்த கதை செட் ஆகி இருக்கிறது. ஆனால் படம் ஆங்காங்கே போராடிக்கிறது. அப்பா பாசத்தை அழுத்தமாக சொல்கிறது. ஆனால் இன்னும் உணர்வுபூர்வமாக, எளிமையாக சொல்லி இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.
அப்பாகுட்டி - கெட்டியான பாசத்தை குட்டியாக சொல்லி இருக்கிறார்கள்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…