விமர்சனம்
அ நிறம் | அளவு
டாக்டராக இருக்கும் முகேன்ராவ், இன்னொரு டாக்டரான ப்ரீத்தி அஸ்ராணியை காதலிக்கிறார். தனியார் ஆஸ்பிட்டல் நிர்வாகியாக நிதின் சத்யா சில சட்டவிரோத செயல்களை செய்கிறார். அந்த பிரச்னையில் ப்ரீத்தி அஸ்ராணி கடத்தப்படுகிறார். பதிலுக்கு அந்த ஆஸ்பிட்டல் ஓனர் சுரேகா வாணி மகள் தன்யா ஹோப்பை கடத்துகிறார் ஹீரோ முகேன். அது ஏன்? ஆஸ்பிட்டல் பின்னணியில் நடக்கும் மர்மங்கள், சட்ட விரோத செயல்கள் என்ன என்பது நிறம் படக்கதை.
மருத்துவதுறை பின்னணியில் நடக்கும் கிரைம் திரில்லர் நிறம். சில தவறுகளை டாக்டரான ப்ரீத்தி அஸ்ராணி தட்டி கேட்கிறார். அவர் வசம் ஒரு முக்கியமான வீடியோ சிக்குகிறது. அதை கைப்பற்ற வில்லன் டீம் துரத்த, அவர் கடத்தப்பட, அவரை தேடி ஹீரோ அலைவதும் கண்டுபிடிப்பதுமே கதை.
ஹீரோவாக முகேன் நடிப்பில் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. முக்கியமான சில விஷயங்களை கூட நண்பனிடம் கேட்டு முடிவெடுக்கிறார். சில பைட் சீன் மட்டும் ஓகே. ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ராணியின் சமூக அக்கறை, அவர் எடுக்கும் வீடியோவால் பிரச்னை தொடங்குகிறது. அவர் ஒரு பாடல் காட்சி உட்பட சில சீன்களில் அவர் திறமையை காண்பித்து இருக்கிறார். இன்னொரு ஹீரோயினாக தன்யா ஹோப் வருகிறார். அவருக்கு ஓவர் பில்டப். ஆனால் கதையில் முக்கியத்துவம் இல்லை.. அவர் அம்மாவாக வரும் சுரேகா வாணியை வில்லி மாதிரி காண்பித்து கடைசியில் ஏமாற்றமாக முடித்து இருக்கிறார் இயக்குனர்.
வில்லனாக வரும் நிதின் சத்யா சில இடங்களில் மிரட்டி இருக்கிறார். அரசியல்வாதி ஆக வரும் கஜராஜ் ஒரு திருப்புமுனை கேரக்டரில் வருகிறார். பல கேரக்டர்கள் நிறைவில்லாமல் இருக்கின்றன. காதல், பைட், பாடல், கிளைமாக்ஸ் என எதிலும் உருப்படி இல்லை. எந்த கேரக்டரும் மனதில் பதியவில்லை.
இதில் போதை மருந்து கடத்தல், விசாரணை என இன்னொரு டிராக் சம்பந்தம் இல்லாமல் நீள்கிறது. தன்யா ஹோப் எதையோ செய்யப் போகிறார் என நினைத்தால் அதிலும் ஏமாற்றம்.
இமான் பாடலில் இதம் இல்லை. கதை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிகிறது. அம்மா பாசக்கதை, காதல், அப்பா பாசம், அரசியல், கிரைம் என குழப்பி இருக்கிறார் இயக்குனர்.
நிறம் - இரண்டு கடத்தல் பின்னணியில் சுமாரான திரில்லர் கதை

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…