விமர்சனம்
அ நிறம் | அளவு
ஒரு நாள் இரவு, சரியாக 11:30 மணி ஆகும்போது சிக்னலில் காரை நிறுத்துகிறார் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப். அப்போது சில இளைஞர்கள் பைக்கில் வேகமாக செல்கிறார்கள். சற்று தள்ளி ஒரு பெண்ணின் பைக் கவிழ்ந்து கிடக்கிறது. என்ன நடந்தது என சுற்றிலும் பார்க்கிறார் சந்தோஷ். இதற்கிடையில், மீடியாவில் வேலை செய்யும் தனது மகள் பவ்யாவை காணவில்லை. இரவில் ஆபீசில் இருந்து புறப்பட்டவர் வீட்டுக்கு வரவில்லை என அவர் தந்தை ஜெயபிரகாஷ் தேடுகிறார். இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? சந்தோஷ் வாழ்க்கையில் இதற்குமுன்பு இரவு 11:30மணிக்கு சிக்னலில் நடந்த அசம்பாவிதம் என்ன? அவர் மனைவி பூஜிதாவுக்கு என்ன ஆனது. இந்த 3 சம்பவங்களை இணைந்து பின்னப்பட்ட திரில்லர் கதை சிக்னல் அட் 11:30. மலர்விழி நடேசன் இயக்கி உள்ளார்
ஹீரோ சந்தோஷ் பிரதாப் என்றாலும், இந்த படத்தில் கதைதான் ஹீரோ. சில சம்பவங்கள் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கோபக்காரராக, என்ன செய்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாதவராக சந்தோஷ் வருகிறார். பிளாஷ்பேக் சீனில் சாந்தமான காதலனாக வருகிறார். கிளைமாக்சில் எதிர்பாராத இன்னொரு கேரக்டராக மாறுகிறார். அவர் கேரக்டரும் சரி, நடிப்பும் சரி குழப்பமாகவே இருக்கறது. நடிப்பில் இன்னும் நிறைய ஸ்கோர் பண்ணியிருக்கலாம். பல இடங்களில் அது மிஸ்சிங். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதற்கு காரணங்களை சொல்கிறார் இயக்குனர். ஆனால், அது கதையுடன் உணர்வுபூர்வமாக பொருந்தவில்லை. அதுதான் படத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறது. காதல், தவிப்பு காட்சிகளில் சந்தோஷ் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் எனலாம்.
டாக்டராக வருகிறார் பூஜிதா. அவரின் காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் கலர்புல். ஒருநாள் இரவில் சிக்னலில் அவர் தவிப்பதும், அடுத்து நடப்பதும் மனதை உருக்குகிறது. அவருக்கு போர்ஷன் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை தருகிறார். ஹீரோவால் கடத்தப்பட்ட பெண்ணாக, டிவியில் வேலை செய்பவராக, கிளைமாக்சில் இன்னொரு முக்கியமான கேரக்டராக வருகிறார் பவ்யா தரிகா. கடைசி அரைமணி நேர கதையில் அவர் பங்கு முக்கியமானது. ஆனாலும், இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்து இருக்கலாம். அவர் கேரக்டரை இன்னும் விரிவாக, டுவிஸ்ட்டுகளுடன் காண்பித்து இருக்கலாம்.
காணாமல் போன மகளை தேடுபவராக ஜெயபிரகாசும், டிவி சேனல் அதிகாரியாக முனிஸ்காந்த்தும் வருகிறார்கள். சீரியஸ் கதை என்பதால் முனிஸ்காந்த் சிரிக்க வைக்கவில்லை. ஆபீஸ் மீட்டிங் என்ற பெயரில், விசாரணையில் அவர் அடிக்கும் ஜோக் மொக்கை. இமான் பாடல், பின்னணி இசை சுமார் ரகம். இரவு நேர காட்சிகள், கார் சேசிங் காட்சிகளை திறமையாக எடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா.
இரவு நேரத்தில் ஒரு சிக்னலில், அதன் அருகே நடக்கும் சில சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட திரில்லர் கதை. ஆரம்பம் முதல் கடைசிவரை என்ன நடக்கிறது என்ற சஸ்பென்ஸ் நீளுகிறது. கடைசி சில நிமிடங்கள்தான் ஓ இது நடந்து இருக்கிறது. இப்படி கேரக்டர்கள் மாறியிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது. அதுவரை எளிமையாக புரியாத கதையாக இருக்கிறது. முனிஸ்காந்த் சம்பந்தப்பட்ட சீன்கள் போரடிக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட்தான் படத்தின் உயிர். அது பார்வையாளர்கள் ரசிக்கும்படி இல்லை. இது நடந்தது. அதற்காக இப்படி நடந்தது. இப்படி முடிகிறது என படத்தை முடிக்கிறார் இயக்குனர். நல்ல கதையை இப்படி மாற்றிவிட்டாரே, இப்படி வேறு மாதிரி சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் வருகிறது. ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக மிதமான வேகத்தில் செல்லும் கதை, கடைசியில் ரூட் மாறி கவிழ்கிறது.
சிக்னல் அட் 11:30 - சிக்னலில் நிற்காமல் சென்று கவிழ்கிறது கதையும்!

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…