சென்னை சிக்னலில் உருவான சிக்னல் அட் 11:30
ஜூலை 30, 2026
Advertisement
மலர் விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரபாப், பவ்யா, பூஜிதா நடிக்கும் படம் சிக்னல் அட் 11:30. இந்த படம் குறித்து இயக்குனர் கூறியது ""நான் இயக்கும் 2வது படம் இது. ஒருமுறை சென்னை சோழிங்கநல்லுார் சிக்னலில் காரில் கூடுதலாக சில நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது. அப்போது இந்த கரு உருவானது. தனிப்பட்ட ஒருவருக்கு 11:30 மணிக்கு சிக்னலில் என்ன நடக்கிறது. என்ன பாதிப்பு வருகிறது. அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை திரில்லர் கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறோம். தலைப்புக்கு ஏற்ப, சிக்னலுக்கு படத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. கதை உருவான சிக்னல் அருகே படப்பிடிப்பு நடத்தினோம்.
ஒரு மாறுபட்ட கேரக்டரில் சந்தோஷ் வருகிறார். பூஜிதா அவர் காதலியா? மனைவியா? பவ்யா யார் என்பது சஸ்பென்ஸ். இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை ஜெர்மனியில் டாக்டருக்கு படத்தில் என் மகள் ஷிவானி தயாரிக்கிறார். ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார். கதையில் திருப்பங்கள், சஸ்பென்ஸ் நிறைய இருக்கும். சந்தோஷ் பிரதாப் கேரக்டரில் நிறைய லேயர் உள்ளது. சென்னை, கொடைக்கானிலில் படப்பிடிப்பு நடந்துள்ளது. செப்டம்பரில் வெளியிட பிளான்" என்றார்

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!