விமர்சனம்
கல்யாணமாகப்போகும் ஆண்களுக்கே இருக்கும் செக்ஸ் தொடர்பான பயம் கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆயுஸ்மான் குரானா.
டாய்லெட் படத்தில் அக்ஷ்ய்யின் மனைவியாக நடித்த பூமி பத்னேகர், தான் இப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிப்பில் ஒரே மாதிரியான முகபாவனைகளை காண்பிப்பது பலவீனம். சீமா, பிஜேந்திர காலா ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இயக்கம் என்று பார்த்தால் ஆர்எஸ் பிரசன்னா சிறப்பாக செய்திருக்கிறார். கதையை விட திரைக்கதையை அவர் கொண்டு சென்றுள்ள விதம் மிக நேர்த்தியாக இருக்கிறது. முதல்பாகம் நகைச்சுவையாக கலகலப்பாக செல்கிறது, ஆனால் பின்பாதி அந்தளவுக்கு கலகலப்பாக இல்லாதது பலவீனம். வசனம், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
ஆண்களின் செக்ஸ் தொடர்பான பிரச்னையை மிக நேர்த்தியாக, ஆபாசம் இல்லாமல் அழகாகவும், காமெடியாகவும், அதேசமயம் கொஞ்சம் மெஸேஜ் உடன் கூடி வெளிவந்திருக்கும் சுப மங்கல் சாவ்தன் படத்தை ஒரு முறை பார்க்கலாம், ரசிக்கலாம்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!