விமர்சனம்
குமுதம் விமர்சனம்
பொதுச் சேவை செய்யும் காதலி.
ஜல்சா செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்ட காதலன், ஒத்து வராது என ஒதுங்கிப் போகும் காதலியை துரத்திப் பிடிக்கும் ஹைவேஸ் பயணம்தான் கதை. கம்மியம் தெலுங்குப் படத்தின் ரீமேக்.
பணக்கார போக்கிரி வேடத்திற்கு புதுமுகம் சர்வானந்த் கன கச்சிதம். காதலியின் சோஷியல் சர்வீஸை கண்டிக்கும்போது அப்ளாஸ் அள்ளுகிறார். என்னை மாதிரிப் பொண்ணை காதலிக்கறதுன்னா அது சும்மா இல்ல என தனது நடன அமைப்பு, நாட்டியம் மூலமாக தெளிவாகப் புரிய வைக்கிறார் கமலினி முகர்ஜி.
சர்வானந்த் - ரவிகிருஷ்ணா நட்பு படத்தில் உயிர்ப்பு. தீவிர கம்யூனிஸ்டுகளையும், துப்பாக்கித் தத்துவத்தையும் சம்பந்தமேயில்லாமல் இயக்குனர் போட்டுத் தாக்குவது தேவையில்லாத இடைச்செருகல்.
காதல்னா சும்மா இல்ல - காதலை சொல்ல மறந்த கதை.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!