விமர்சனம்
பெண் இயக்குனர் என்றெல்லாம் சமரசம் செய்து கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ரூபாவை மனமாரப் பாராட்டலாம். ஸ்ரேயாவின் கவர்ச்சியை அள்ள அள்ளக் குறையாமல் கவர்ந்து வந்திருக்கிறது. சாத்தப்பன் நாராயணனின் கேமரா, சபாஷ்! கவுதம் ஸ்ரீவத்சவாவின் இசையில் பாடல்கள் கிளாசிக்கல் ரகம். கதையோடு இழைந்தோடும் கானங்கள் காதுக்கு இதம்.
நாயகன் பிரேம், கட்டுமஸ்தான தேகத்தோடு, அசத்தலான நடிப்பைத் தந்துள்ளார். ஸ்ரேயா, வாழைத்தண்டு கால்களுடன், வெண்ணை உடலோடு, சுழன்று ஆடுகிறார். வாள் சண்டை போடுகிறார். சோக பாவங்களில், ரசிகர்களை துவண்டு போகச் செய்கிறார். கணேஷ் வெங்கட்ராமன் வழக்கம்போல் கனகச்சிதம், காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளில் பழைய நெடி.
அரண்மனையின் படுக்கையறையில், பிரமாண்ட சங்குகளில் ஒளிரும் மின் விளக்குகள் கற்பனையின் உச்சம். காலணியிலிருந்து உடைகள் வரை துல்லியமாக ராஜ வாழ்வை சித்தரித்திருக்கிறது படம். பாராட்டுக்கள்!
மொத்தத்தில், சந்திரா - நளினம்!
ரசிகன் குரல் : அபாய வளைவுகளோடு ஆடும் ஸ்ரேயாவை நம்மாளுங்க மறந்திட்டாங்களே மச்சான்!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!