பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனை தெரியும், ஜெமினி சந்திராவை தெரியுமா?
ஏப் 11, 2026
Advertisement
அந்த காலத்தில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஜெமினி ஸ்டூடியோ. இந்த கம்பெனியில் நடிகர், நடிகை தேர்வாளராக பணியாற்றிய கணேசன் பின்னாளில் நடிகராகி ஜெமினி கணேசன் ஆனார். இவரைப்போலவே ஜெமினி ஸ்டூடியோ படங்களில் மாத சம்பளத்திற்கு நடித்து புகழ்பெற்ற சந்திரா பின்னாளில் ஜெமினி சந்திரா ஆனார்.
இவரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் "உத்தம புத்திரன்" படத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர். "நாகமலை அழகி" என்ற படத்தில் கதாநாயகியாகவும், “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் ஜோடியாகவும் நடித்தவர். "பட்டினத்தார்" படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுடன் ஜோடியாக நடித்தார். கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மாடப்புறா , பாகப்பிரிவினை, இந்திரா என் செல்வம் , மாதவி, அமுதவல்லி , புதையல் போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்கள் ஒரு கட்டடத்தில் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாள படங்களில் நடித்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய இவர், 1998ம் ஆண்டு தனது 62வது வயதில் காலமானார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!