சூர்யாவின் சீன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
அக் 28, 2026
Advertisement
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது சீன் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளார் சூர்யா. நவம்பர் 6ம் படம் வெளியாகிறது. மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் நகைச்சுவை அம்சங்களும் அதிகம் இடம் பெற்றுள்ளன. இதில், நஸ்ரியா நசீம் நாயகியாக நடிக்க, நஸ்லன் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் தற்போது யு/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டு, 2 மணி நேரம் 29 நிமிடங்கள் என்ற கச்சிதமான ஓடும் நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் ராமாயணா படத்துடன் இணைந்து வெளியாவதால், மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்க விளம்பரங்களை படக்குழு மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இருப்பினும், படத்தின் கதைக்களமே பேசும் என்பதில் தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படத்தை சூர்யா, ஜோதிகா மற்றும் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!