பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தெலுங்கு சினிமாவின் பிரபல காமெடி நடிகரான பிஷ் வெங்கட், 53, உடல்நலக் குறைவால் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் 25 ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். தெலுங்கானா பகுதியை சேர்ந்த கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் பேசும் பாஷையில் இவர் வசனம் பேசுவதால் இவருக்கு திரையுலகில் பிஷ் வெங்கட் என்கிற பெயரே நிலைத்து விட்டது. கபார் சிங், டிஜே தில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைய தொடர்ந்து ஆக்ஸிஜன் உதவியுடன் ஐதராபாத்தில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். விரைவில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்பட்டது. நடிகர் பிரபாஸ் உதவி செய்ய முன் வந்ததாக தகவல் வந்தது. ஆனால் இதை அவரின் மகள் மறுத்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.