'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை |

மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் கோபி சுந்தர். தமிழில் தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது கோபி சுந்தர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மலையாள திரையுலகில் பரபரப்பையும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோபி சுந்தர் பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தான் அது.
இந்த அம்ரிதா சுரேஷ், இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகருமான பாலாவின் முன்னாள் மனைவி ஆவார். 2010ல் ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவருக்கும், நடுவராக கலந்துகொண்ட பாலாவுக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து அந்த இருவருக்கும் கடந்த வருடம் தான் விவாகரத்து ஆனது.
அதேபோல ஏற்கனவே பிரியா என்பவருடன் திருமணம் ஆன கோபி சுந்தர் 2010ல் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு அதன்பிறகு கடந்த எட்டு வருடங்களாக பின்னணி பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் தற்போது அம்ரிதா சுரேஷுடன் மிக நெருக்கமாக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படமும் அதுகுறித்து அவர் கூறியுள்ள வார்த்தைகளும் இவர்களுக்குள் புதிய உறவு மலர்ந்துள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. கோபி சுந்தருக்கு நெருக்கமான சில நண்பர்கள் இந்த புதிய உறவை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




