இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார், என்டிஆர் என்கிற நந்தமூரி தாரக ராமாராவ், யாரும் நிரப்ப முடியாத ஆளுமை. இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக புகழ்பெற்றவர். தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக 3 முறை வெற்றி வாகை சூடியவர். பகவான் கிருஷ்ணராக நடித்து தெலுங்கு மக்கள் மத்தியில் வாழும் கிருஷ்ணராக மாறி இருந்தவர். தற்போது அவரது வாரிசுகள் தெலுங்கு சினிமாவின் முன்னணி இடத்தில் இருக்கிறார்கள்.
என்.டி.ராமராவுக்கு வருகிற 28ம் தேதி 99 வயது முடிந்து 100வது வயது தொடங்குகிறது. இதையொட்டி என்டிஆர் நூற்றாண்டு விழாவை ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு ஆண்டுக்கு கொண்டாட இருக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியை என்டிஆரின் மகனும் 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகருமான என்.டி.பாலகிருஷ்ணா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி என்டிஆர் பிறந்த நிம்மகுருவில் நடக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசின் சார்பிலும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில் என்டிஆர் நடித்த படங்களை திரையிட இருக்கிறார்கள். நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள்.




