
விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ்
ஜன 11, 2023
ஐடி ஊழியரான வினுஷா தேவி மாடலிங்கில் நுழைந்து பிரபலமானதை தொடர்ந்து சின்னத்திரை, சினிமா அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் மாடலிங்கையும் விடாமல் அடிக்கடி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் விண்டேஜ் ஸ்டைல் தீமுடன் சில புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதற்கான இன்ஸ்பரேஷன் தனது அம்மாவின் பழைய புகைப்படத்திலிருந்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார். பேக்ரவுண்டு, கலர் டோன் என 80-களை நினைவுப்படுத்தும் அந்த போட்டோஷூட்டின் ஒரு புகைப்படத்தில் சராசரி குடும்பத்து பெண் அந்த காலத்தில் போட்டோ எடுக்கும் போது எப்படி வெகுளியாக போஸ் கொடுப்பார் என்பதையும் தத்ரூபமாக நின்று காட்டியுள்ளார். இந்த விண்டேஜ் சீரியஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வினுஷா தற்போது விஜய் டிவியின் "பாரதி கண்ணம்மா" தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தவிர, இவர் நடித்த என்-4 என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
வினுஷா தற்போது விஜய் டிவியின் "பாரதி கண்ணம்மா" தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தவிர, இவர் நடித்த என்-4 என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!