
காலில் கட்டுடன் ஆல்யா மானசா
அவருக்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததன் காரணமாக அதிகரித்த உடல் எடையை கடுமையான பயிற்சிகளை செய்து குறைத்த ஆல்யா தற்போது "இனியா" சீரியலின் மூலம் அண்மையில் தான் கம்பேக் கொடுத்தார். ஆனால் அதற்குள், ஆல்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் பூரண குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள ஆல்யா, தான் படப்பிடிப்புக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் நிம்மதியடைந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கவனமாக இருக்க சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!