
நடிகை வடிவுக்கரசியை புகழ்ந்த ஸ்ரீகுமார்
ஜன 08, 2025
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே நடித்து வருகிறார். இவர் அண்மையில் விழா ஒன்றில் பேசிய போது மூத்த நடிகையான வடிவுக்கரசியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பேசிய போது, "ஒரு சில நடிகைகள் இன்று சீரியலில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துவிட்டாலே எனக்கு அவரை தெரியும் இவரை தெரியும் என திமிராக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். இவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். ஆனால், வடிவுக்கரசி அம்மா அப்படியில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோருடனும் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் யாரிடமும் திமிராக நடந்து கொள்ளமாட்டார். தன்னுடன் நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு செல்வார்" என புகழ்ந்து பேசியிருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!