மீண்டும் களமிறங்கும் சிபு சூரியன்
டிச 02, 2024
சின்னத்திரையில் ‛ரோஜா" தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிபு சூரியன். அந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இவர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 தொடரில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் சிபு சூரியனுக்கு வெற்றியை தரவில்லை. பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜீ தமிழில் வீரா என்கிற தொடரில் சிபு சூரியன் நடிக்க, அந்த தொடரிலும் அவரது கதாபாத்திரம் வெறும் கெஸ்ட் ரோலாகவே சுருக்கப்பட்டது.
இந்நிலையில், சிபு சூரியன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ரோஜா தொடருக்கு பின் நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிபு சூரியனுக்கு இந்த புதிய தொடராவது பிரேக் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!