
ஜோவிகாவை நடிகையாக்க நினைக்கல - வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்
அந்த பேட்டியில் தனது மகள் சினிமா துறைக்கு வருவதை குறித்து பேசியுள்ள வனிதா, "ஜோவிகாவை நான் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நானே சினிமாவை விட்டு வெளியேவந்தவள் தான். நான் எப்படி அவளை அதில் தள்ளுவேன். நடிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு ஒரு தாயாக துணை நிற்பது என் கடமை என்று கூறியுள்ளார்".
மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், "நான் எந்த ஒரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் வாழ்கை தொடர்கிறது. புள்ளி என்றால் அது முடிவு. எனவே, மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று சொல்லமாட்டேன்" என கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!