குஷ்பு சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் வில்லி நடிகை
மார் 09, 2022
Advertisement
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் பூஜா லோகேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பூஜா, கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் பல சீரியல்கள் நடித்துள்ளார். இடையில் பல காலங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த அவர், ஸ்டைலிஸ்ட் கன்சல்டண்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது குஷ்புவுடன் இணைந்து மீண்டும் நடிக்கவுள்ளார். கலர்ஸ் தமிழில் குஷ்பு நடிப்பில் "மீரா" என்ற புதிய தொடர் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. அந்த தொடரில் பூஜா லோகேஷ் கம்பேக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பூஜா கூறுகையில், "நிச்சயம் நீங்கள் என்னை வெறுப்பீர்கள்" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் "மீரா" தொடரில் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதை சூசகமாக சொல்லியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!