
கண்ணான கண்ணே தொடரில் என்ட்ரியாகும் வெள்ளித்திரை நடிகை
கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ மட்டுமே இப்போது வரை முக்கிய கதாபாத்திரமாக நடித்து வந்தது. தற்போது கெளசல்யா கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கவுசல்யா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் குஷியடைந்துள்ளனர். இனியாவின் என்ட்ரிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியல் மேலும் பிரபலமாகும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!