
ஹிட் சீரியலில் இருந்து விலகிய பரீனா
ஏப் 12, 2022
Advertisement
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அபி டெய்லர்" தொடரில் பவானி என்ற கதாபாத்திரத்தில் பரீனா நடித்து வந்தார். அவரது கேரக்டர் சமீப காலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில் பரீனாவும் சூப்பராக பெர்பார்மென்ஸ் செய்து வந்தார். இந்நிலையில், இந்த தொடரிலிருந்து பரீனா திடீரென விலகிவிட்டார். அவர் விலகியதற்கு காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் அவர் நடித்து வந்த பவானி கதாபாத்திரத்தில் கீர்த்தி என்ற நடிகை நடிக்க ஆரம்பித்துள்ளார். கீர்த்தி முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை, ப்ரியமானவள், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரலேகா, மாங்கல்ய சந்தோஷம் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!