அகோரி கெட்டப்பில் புகைக்கும் திவ்யா கிருஷ்ணன்
பிப் 22, 2023
கேப்டன் டிவியின் "சமையல் மந்திரம்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இளைஞர்கள் வட்டாரத்திலும் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமாக "கிருஷ்ணதாசி" சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா, தற்போது மீண்டும் நடிகையாக என்ட்ரி கொடுத்து சீரியல் சினிமா என நடித்து வருகிறார். சோஷியல் மீடியாக்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொண்டு "தினமும் ஒரு திருக்குறள்", நகைச்சுவையான ரீல்ஸ் கான்செப்ட் என புதுப்புது ஐடியாக்களின் மூலம் டிரெண்டிங் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். திவ்யாவை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திவ்யா தற்போது சிவராத்திரியை முன்னிட்டு பெண் அகோரி கெட்டப்பில் கஞ்சா பிடிப்பது போல் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், "தினமும் ஒரு திருக்குறள்" என நல்ல செயலை செய்துவிட்டு இப்போது புகைப்பது போல் புகைப்படம் போட வேண்டுமா? என சிலர் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!