பிரபல சீரியலிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற இயக்குநர் : இன்ஸ்டாகிராமில் உருக்கம்
அக் 02, 2021
Advertisement
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையம்சம் கொண்ட தொடர்களை வழங்கி டிஆர்பியில் எட்டிப் பார்க்க ஆரம்பிந்துள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்றாக "சில்லுன்னு ஒரு காதல்" ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. இதுவரை 275 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சமீர் அஹமது, தர்ஷினி கெளடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வந்த அதன் இயக்குநர் சுரேஷ் ஷண்முக தொடரை விட்டு தற்போது விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டெக்னீசியன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ள சுரேஷ், "பிரசவத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயை போன்ற என் நிலை..." என சீரியலை விட்டு போவதை மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!