கபடி ஆடி காலை உடைத்துக்கொண்ட ஆல்யா!
ஜன 16, 2023
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இப்போது தான் இனியா என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், கடைசி சில நாட்களாக அவர் தனது இன்ஸ்டாவில் "காலில் எலும்பு முறிவு", "பேக் டூ ஷூட்டிங்", "காலில் ஆபரேஷன்" என மாறி மாறி பதிவிட்டு வந்தார். இதனால், ஆல்யாவுக்கு உண்மையிலேயே விபத்தா அல்லது ஷூட்டிங்கிறாக நகைச்சுவையாக எதாவது செய்கிறாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
தற்போது, ஆப்ரேஷன் முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ள ஆல்யா, ஒரு மாதத்திற்கு முன் கபடி விளையாடியதாகவும் அப்போது தான் கால் முறிவு ஏற்பட்டதாகவும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆல்யா ஒரு மாதகாலத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இருப்பினும் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று தான் தெரிய வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆல்யாவுக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!