தந்தையின் பிறந்தநாளில் அனிதா வெளியிட்ட உருக்கமான பதிவு
Advertisement
Advertisement
தந்தையின் பிறந்தநாளில் அனிதா வெளியிட்ட உருக்கமான பதிவு
ஜன 18, 2023
அ நிறம் | அளவு
Advertisement
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மகள் தான் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். அப்பாவை போலவே அனிதாவும் செய்தியாளராக, செய்திவாசிப்பாளராக ஊடகத்தில் பணியை தொடங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் இன்று நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஜனவரி 16ல் ஆர்.சி.சம்பத்தின் பிறந்தநாள். இதனைமுன்னிட்டு அப்பாவை நினைத்து மிக உருக்கமான பதிவொன்றை அனிதா பதிவு செய்திருந்தார். அதில், "உங்கள பெத்தவங்க இருக்கும் போதே அவங்கள கொண்டாடுங்க. நல்லா பாத்துக்கோங்க" என அன்பான வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனையடுத்து தந்தையை நினைத்து நெகிழ்ந்து உருகிக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு பலரும் ஆறுதலையும், அன்பையும் தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!